வகைப்படுத்தப்படாத

எஸ்.எப் .லொக்கா கடத்திய சொகுசு ஜூப் வாகனம் மீட்பு!

(UDHAYAM, COLOMBO) – அனுராதபுரத்தில் இரவு விடுதியொன்றில் உரிமையாளரான கராதே வசந்த சொய்சா கொலை சம்வத்துடன் தொடர்புடைய ஹிரோன் ரணசிங்க என்ற எஸ்.எப்.லொக்கா உள்ளிட்ட குழுவினரால் கடத்தப்பட்ட சொகுசு ஜீப் வாகனம் மிகிந்தலை – குருந்தன்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குத்தகை நிறுவனமொன்றால் கைப்பற்றப்பட்டு கொழும்பில் உள்ள நிதி நிறுவனமொன்றிற்கு குறித்த வாகனம் கொண்டு செல்லப்பட்டிருந்த வேளையில் இவ்வாறு கடத்தப்பட்டது.

இந்த ஜூப் வாகனம் சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியுடையதாகும.

கடந்த 21ம் திகதி மாலை அனுராதபுரம் , மல்வத்து படுகம பிரதேசத்தில் வைத்தே குறித்த ஜூப் வாகனம் கடத்தப்பட்டிருந்தது.

Related posts

இந்த ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் “பீற்றர் தபசி”

ජනාධිපති ක්‍රීඩා සම්මාන උළෙල අදයි

விமானம் கடலில் வீழ்ந்து விபத்து