உள்நாடு

எல்ல பேருந்து விபத்து – சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு

எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சாரதி மது அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் அறிவதற்காகவே, சாரதியின் இரத்த மாதிரிகளை இன்று (7) அந்த திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு எல்ல வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் பேருந்து சாரதியும் உயிரிழந்தார்.

இந்நிலையில் விபத்து ஏற்பட்ட போது அவர் ஏதேனும் போதைப்பொருள் அல்லது மதுபானம் அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் உறுதி செய்ய இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

ஏறாவூரில் கைக்குண்டுகள் மீட்பு!

editor

முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

editor

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றும் வேலை நிறுத்தம்!