எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் நேற்று (04) இரவு வீடொன்றில் இடம்பெற்றது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அல்ல என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு காரணமாக வீட்டின் முன்பக்க ஜன்னல் உடைந்து, வீட்டில் உள்ள பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, எல்பிட்டிய பொலிஸார் மற்றும் குற்றவியல் விசாரணை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எல்பிட்டிய குற்றவியல் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இது துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட சேதம் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
குழாய் போன்ற ஒன்றில் வெடி மருந்து உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அதனை வீசிய பின்னர் ஏற்பட்ட வெடிப்பால் சேதம் ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட இடத்தில் காணப்படும் பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக அரசு பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்படவுள்ளன.