உள்நாடு

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

(UTV | கொழும்பு) –

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் இந்த நோய்களுக்கு வழிவகுக்கும் என அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிடுகின்றார்.

குறைந்தளவு நீர் உள்ள இடங்களில் குளிப்பதன் மூலம் தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

குடிநீர் விற்பனை செய்யும் இடங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிடுகிறது.

ஏனைய முறைகளில் கிடைக்கும் தண்ணீரை குடித்தால், காய்ச்சிய தண்ணீரையே பயன்படுத்த வேண்டும் என்றும் சங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிபொருள் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

நிறை குறைந்த பாண் விற்பனை | 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு !

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு