உள்நாடு

எரிபொருள் விலைகள் அடுத்த மாதம் குறைவு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்னர், அநீதியான முறையில் அமுலில் இருக்கும் எரிபொருள் விலைகள் குறைப்படும் என முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கம் ஒன்றின் பிரதிநிதிகள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு எதிரில் இன்று(07) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என்பதை நான் தெளிவாக கூறுகிறேன். அன்று நல்லாட்சி அரசாங்கத்தின் மின்வலு, எரிசக்தி அமைச்சராக இருந்தேன். நாங்கள் 12 நாட்களில் பெட்ரோல், டீசல், மண் எண்ணெய் விலைகளை குறைத்தோம்.

ராஜபக்ஷவின் எரிபொருளுக்கு விதித்துள்ள வரிகளை கட்டாயம் நாங்கள் குறைப்போம். குடிநீர் மற்றும் மின்சார கட்டணங்களுக்கு கட்டாயம் மானியம் வழங்குவோம். எந்த குறைப்பும் இன்றி அரச ஊழியர்களுக்கு நாங்கள் அதிகரித்த முழு சம்பளத்தையும் வழங்குவோம்.

அதேபோல அதிகரிக்கப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவும் வழங்கப்படும். அத்துடன் எந்த ஊழியர்களையும் வேலைகளில் இருந்து வெளியேற்ற மாட்டோம். அவர்களை அரசாங்கம் பராமரிக்கும் எனவும் சம்பிக்க ரணவக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

editor

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் திங்களன்று விடுவிப்பு

மதுபோதையில் மயங்கிய SLTB ஊழியர்கள் – பொலிஸ் ஜீப்பில் போக்குவரத்து வசதி

editor