உள்நாடு

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுலாகும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை என்பது தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பொறுப்பான அமைச்சர் முன்னர் தெரிவித்ததாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அமைச்சரின் வாக்குறுதியின்படி விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 533 பேர் கைது

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் விசேட அறிவிப்பு

editor

மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் – IMF பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்த ஜனாதிபதி அநுர

editor