உள்நாடு

எரிபொருள் விநியோகம் மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) –   இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழி மீறப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முதல் (04) விநியோக சேவை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்க இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.

செயற்பாட்டுக் கட்டணங்களுக்கு வழங்கப்பட்ட 45% தள்ளுபடியை மீளப்பெறும் கூட்டுத்தாபனத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பணம் நேற்று கழிக்கப்பட்டிருந்ததாகவும் அது மீண்டும் இன்று வங்கிகளில் வரவு வைக்கப்பட்டதையடுத்தே பகிஷ்கரிப்பை கைவிடத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

விநியோகஸ்தர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக இன்றையதினம் பல எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதால் மட்டுமே அரசியல் மாற்றத்தை சாத்தியமாக்கிக்கொள்ள முடியும் – பொசொன் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு அடுத்த மாதம்

மஹிந்தவை அவசரமாக சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்