சூடான செய்திகள் 1

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணங்களை குறைக்க முடியாது

(UTV|COLOMBO)-எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணங்களை குறைக்க முடியாதென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

விலை சூத்திரத்தின் ஊடாக எரிபொருட்களின் விலைகளில் மாதாந்தம் திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விலை சூத்திரத்தின் பிரகாரம் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறில்லாவிட்டால் தனியார் பேருந்து துறையில் மாத்திரம் அல்லாது, அனைத்து துறைகளிலும் சிக்கல் ஏற்படும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், எரிபொருள் விலைகுறைப்பின் பிரதிபலன் மக்களை சென்றடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

UPDATE – கோத்தபாய உள்ளிட்ட 07 பேருக்கும் விஷேட மேல் நீதிமன்றினால் பிணை

ஹெரோயின் கடத்தலில் ஈடுபடும் குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

“சுதந்திர வர்த்தக உடன்பாடு, சீன – இலங்கை சுதந்திர வர்த்தகத்தில் மற்றொரு படிக்கல்லாக அமையும்”