உள்நாடு

எதிர்வரும் செவ்வாயன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும்

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள போதிலும் தீர்மானிக்கப்பட்டவாறு எதிர்வரும் செவ்வாய்கிழமை நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விவாதம் ஒத்திவைக்கப்பட்டமையினால் அன்றைய தினம் கூட்டத்தொடர் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் 9,10, மற்றும் 11ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவது தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் எதிர்வரும் திங்கட் கிழமை முற்பகல் 9.30 அளவில் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது என மேலும் தெரிவித்தார்.

Related posts

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு!

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைந்தது

மேல் மாகாண பாடசாலைகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 75 பேர் கைது