உள்நாடுவிசேட செய்திகள்

எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பம்

கொழும்பில் இருந்து பதுளை வரை பயணிக்க புதிய ரயிலொன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக வார இறுதி நாட்களில் இந்தப் புதிய ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, Ella Weekend Express என்ற இந்த புதிய ரயில் சேவையானது எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், 17 ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

 சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி 2 நாட்களுக்குள்

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்