உள்நாடு

எதிர்வரும் 12ம் திகதி முதல் சமையல் எரிவாயு சந்தைக்கு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 12ம் திகதி முதல் தினமும் ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரம் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் கூறியதாவது:

இம்மாதம் பதினொன்றாம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை முப்பத்து மூவாயிரம் மெற்றிக் தொன் எரிவாயு பெறப்படும். அதன்படி, இம்மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்திலோ தற்போதைய எரிவாயு தட்டுப்பாடு நீங்கும்.

கொழும்பு நகரில் 140 இடங்களில் எரிவாயு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த ஒவ்வொரு இடங்களுக்கும் 100 12 கிலோ சிலிண்டர்கள் கொண்ட 140 ஆயிரம் சிலிண்டர்கள் இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பேக்கரிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கும் எரிவாயு வெளியிடப்படுகிறது. இவை அனைத்தும் வானிலை மற்றும் கடலின் தன்மையைப் பொறுத்து மாறக்கூடியவை. ஆனால் அடுத்த 4 மாதங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் எரிவாயுவை வழங்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

Related posts

மேல் மாகாணத்தில் 993 பேர் கைது

டிஜிட்டல் அடையாள அட்டை – நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் – இந்திய நிறுவனம் வெளியேறிவிடும் – ஜனாதிபதி அநுர

editor

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கும் நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டது.

editor