உள்நாடு

எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானம்

(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை உத்தேசிக்கப்பட்ட தினத்தில் ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்களில் பரீட்சையை நடத்த முடியுமா என்பது தொடர்பில் அடுத்த 10 நாட்களில் தீர்மானித்து அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 763 : 08 [COVID 19 UPDATE]

ஊரடங்கு எதற்காக?

பாரிய வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!