அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

தீமையை அழித்து நன்மையை வென்ற நாளாகக் கருதப்படும் தீபாவளி, இந்து மதத்தினருடைய விசேட பண்டிகையாகும்.

தீமையை விரட்டியடித்து நன்மை உதயமாகியதன் மூலம் உலகம் ஞான ஒளியைப் பெற்றது.

உலகிற்கு வீசிய ஒளியைக் குறிக்கும் வகையிலயே தீபம் ஏற்றி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

தீபாவளி பண்டிகையில் உட்பொதிந்துள்ள அர்த்தங்களை புரிந்துகொள்வது சமூகத்தின் மிக முக்கிய கடமையாகும்.

சமகாலத்திலும் பொய்களால் உண்மை மூடி மறைக்கப்பட்டு, அறியாமையால் விஞ்ஞான அறிவியல் மூடி மறைக்கப்படும் சூழலில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதனால் நன்மைக்கு பதிலாக தீமை வலுவடைந்து காணப்படுகின்றது. தீமைகளைப் பெரும் வீரமாக கருதி அதனை மகிமைப்படுத்தப்படுவது மிகப்பெரும் கவலையாகும்.

தெரிந்தோ அல்லது தெரியாமலோ சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டிய நிறுவனங்கள், சமூகத்தை தெளிவூட்ட வேண்டிய ஊடகங்கள், தீமைகளை தோற்கடிக்கும் செயல்பாடுகளை வீரதீர சாகசக் காட்சிகளாக வெளியிட்டு அறிக்கையிடுவது நன்மதிப்பு மேலோங்கும் சமூகத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளைக் கேள்விக் குறியாக்குகின்றன.

இந்த தீபாவளி தினத்தன்று, தீமைகள் நீங்கி நன்மைகள் மோலோங்கச் செய்து ஞான ஒளியை பிரகாசிக்கச் செய்ய வேண்டும்.

தீங்குவிளைவிக்கும் அம்சங்களை விடுத்து நல்லதை நாம் ஒளியாக சமூகமயப்படுத்த வேண்டும். நாம் வென்ற நன்மைகளை சமூகத்திற்குக் கொண்டு செல்வதே தீபாவளி நமக்கு கற்பிக்கும் பாடமாகும்.

இந்த தீபாவளி கொண்டாட்டத்தில், நல்லதொரு சமூகத்தின் இருப்புக்காக வேண்டி, சமூகத்தைப் பொய்யிலிருந்து உண்மையின் பக்கமும், அறியாமையிலிருந்து அறிவியலின் பக்கமும் கொண்டு வரும் ஒளியாக திகழும் வேலைத்திட்டமொன்றின்பால் அர்ப்பணிப்பது குறித்து நாம் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டைப் புரட்டிப் போடும் கெட்ட இருளுக்கு பதிலாக, மக்களுக்கு ஒளியாய் திகழ வேண்டும்.

இந்த உன்னத நோக்கத்திற்காக இலங்கையர்களாக பங்களிக்க முடியுமான தீபாவளி பண்டிகை அனைவரினது இதயங்களிலும் நல்ல எண்ணங்களால் ஒளிரும் நாளாக அமைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.

சஜித் பிரேமதாச
இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்

Related posts

வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

அதி சொகுசு பேருந்துகள் மீது வழக்குத் தாக்கல்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை – மீளாய்வு விண்ணப்பங்கள் இன்று முதல்

editor