அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

மார்ச் 21 ஆம் திகதி இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு இன்று (18) தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத் திட்ட செயல்பாட்டில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 66 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல கட்சிகள் உள்ளன.

எனவே குறித்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு எமது கடமைகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்.

மார்ச் 21 ஆம் திகதிக்குப் பிறகு இந்தத் தேர்தல் திட்டத்தை நோக்கி நகர்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளோம். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி நடைபெறும்.

அது முடிந்தவுடன், தேர்தல் செயல்முறையைத் தொடங்குமாறு கோரினோம். இந்தக் கோரிக்கையுடனேயே தேர்தல் ஆணைக்குழுவுக்கு வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

Related posts

அமெரிக்க புதிய வரிக் கொள்கையை பற்றி ஆராய ஜனாதிபதியால் கூட்டப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு

editor

அதிகரிக்கும் பேக்கரி பொருட்களின் விலை!

விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – ரிஷாத் [VIDEO]