உள்நாடு

எண்ணெய்த் தாங்கியிலிருந்து வீழ்ந்த ஊழியர் பலி

(UTVNEWS | கொழும்பு) – கொலன்னாவ எண்ணெய்  சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த 54 வயதான, கட்டுகொட, தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஊழியர் ஒருவர் இன்று (14) காலை உயிரிழந்துள்ளார்.

எண்ணெய்த் தாங்கி ஒன்றின் கொள்ளளவை அளப்பதற்காக அதில் ஏறிய குறித்த நபர், அதிலிருந்து நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மின் கட்டணம் உயர்த்தப்படுமா? – இன்று இறுதி தீர்மானம்.

சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்