உள்நாடு

எச்சில் துப்பினால் சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – நெடுஞ்சாலைகளில் எச்சில் துப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பான புதிய சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, குற்றவியல் சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் நெடுஞ்சாலையில் எச்சில் துப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நிலவும் தொற்றுநோய் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த சட்டங்களை கடுமையாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு புயலில் சிக்கியது – மீனவர்கள் மாயம்

editor

ஜனவரியில் அதிகமான மின்சார கட்டண குறைப்பு என்கிறார் மின்சக்தி அமைச்சர்!

ஈஸ்டர் தாக்குதல் : அறிக்கையின் பிரதி ஒன்றை வழங்குமாறு கோரிக்கை