உள்நாடு

எகிறும் ‘டெங்கு’

(UTV | கொழும்பு) – கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 503 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதில், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 48 டெங்கு நோயாளர்கள் கொழும்பு நகர எல்லையில் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 8,205 ஆகும்.

தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – CID கண்காணிப்பில்

வீதியில் இறங்க முடியாத நிலையில் நான் இருக்கின்றேன் – பாதுகாப்பை வழங்கவேண்டும் – அர்ச்சுனா எம்.பி

editor