உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 23,500 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று(11) காலை 6 மணி முதல் இன்று (12) காலை 6 மணி வரையான 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 1,525  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, 350 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 23,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரை 6,500 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்குறிப்பிட்டுள்ளது.

மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுமெனவும் பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தீர்மானம்

மாதம்பே பகுதியில் கோர விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி – மூவர் பலி

editor