உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விஷேட அறிவித்தல்

(UTV| கொழும்பு) – கொழும் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய மாவட்டங்களில் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தளர்தப்பட்ட போதிலும் ஊரடங்கு நிலைமை தொடர்ந்து இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 18 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்தப்படும்.

இவ்வாறு 18 ஆம் திகதி தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது, குறித்த 23 மாவட்டங்களிலும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

வைத்தியசாலையில் மரணித்த சிசு மாயம்! மாத்தறையில் சம்பவம்

தேர்தலில் களமிறங்கும் ரணில்!