கிசு கிசு

ஊரடங்கினை தளர்த்துவது தொடர்பிலான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சில பிரதேசங்களில் ஊரடங்கினை தளர்வுபடுத்த ஆலோசிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள சில பிரதேசங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்படாமையினை கருத்திற் கொண்டே குறித்த திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கம்பஹா மாவட்டத்தின் வேயங்கொடை போன்ற பொலிஸ் பிரிவுகளில் இருந்து ஊரடங்கினை தளரச் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு பணிப்பு?

பசில் நாடு திரும்பாது தீர்மானம் எடுப்பதில் தாமதம்

எரிபொருட்களை கடனாக வழங்க IOC நிபந்தனை