சூடான செய்திகள் 1

ஊடகவியலாளர் மேரி கொல்வின்னின் படுகொலைக்கான காரணம் வெளியானது…

(UTV|COLOMBO)-இலங்கையின் யுத்தகால நிகழ்வுகளை சர்வதேச ஊடகங்களுக்கு கொண்டுச் சேர்த்த முக்கிய ஊடகவியலாளரான மேரி கொல்வின்னின் படுகொலைக்கு சிரிய அரசாங்கமே காரணம் என்று அமெரிக்காவின் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் அவரது குடும்பத்தாருக்கு சிரிய அரசாங்கம் 302.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டயீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிரியாவில் இடம்பெற்ற யுத்தத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த வேளையில், மேரி கொல்வின் 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

சிரிய அரசாங்கத்தினால் மனசாட்சியற்று ஊடகவியலாளரை இலக்கு வைத்து படுகொலை நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த மேரி கொல்வின், தாக்குதல் ஒன்றில் தமது ஒரு கண்ணை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பி நிமல் லன்சா கைது

editor

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்க ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் நிராகரிப்பு