அரசியல்உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தல் – மொட்டு கட்சிக்குள் விசேட கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நேற்று (11) காலை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர கரிவாசம் மற்றும் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், உள்ளூராட்சி பிரதிநிதிகள் குழுவும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

அமைச்சரவை அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்

விமான பயணிகளாக பயணித்து தங்க ஆபரணங்களை கடத்தி செல்லும் கும்பல்

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு