நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களினதும் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
கட்சி உறுப்பினர்களுடன் வாக்களிக்க வந்த அமைச்சர் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது:-
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு ஆரம்பமாகி இதுவரை வாக்களித்து வருகின்றனர்.
தேர்தல் மிகவும் அமைதியாகவும் மக்கள் அமைதியாகவும் வாக்களித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இந்த தேர்தலில் எவருக்கும் எந்த சிக்கல்களும் ஏற்படவில்லை எனவே உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.