உள்நாடுவகைப்படுத்தப்படாத

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதவி வெற்றிடம்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 380 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக தமது சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர் பற்றாக்குறை தொடர்பில் நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் உதவி ஆணையாளர்கள் 221 பேருக்கும் அலுவலக உதவியாளர்கள் 71 பேருக்கும் முகாமைத்துவ ஊழியர்கள் 88 பேருக்கும் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நிறைவேறியது, 2023 ஆம் ஆண்டிற்க்கான வரவு செலவுத்திட்டம்

பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை!

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது

editor