உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

புத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹாகொடயாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (25) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய புத்தல, மஹாகொடயாய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாளை மற்றுமொரு எரிவாயு அடங்கிய கப்பல் இலங்கைக்கு

ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு

உதய கம்மன்பிலவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை