வகைப்படுத்தப்படாத

உலங்கு வானூர்தியில் இடம்பெற்ற பிரசவம்..! குழந்தை பலி!

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருந்த நிலையில் இருதய நோயாளர் ஒருவர் மற்றும் கர்ப்பிணி பெண்ணொருவர் மீட்கப்பட்டு உலங்கு வாநூர்தியில் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் , குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவமொன்று இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது.

கலவானையில் இருந்து இரத்தினபுரி வரை அவர்களை கொண்டு வந்த நிலையில் குறித்த கர்ப்பிணி தாயால் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.

எனினும் , தாயும் குழந்தையும் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இரத்தினபுரி மருத்துவனையின் பணிப்பாளர்  FPAL ரணவீரவிடம் நாம் வினவியிருந்தோம்.

உலங்கு வாநூர்தியில் பிரசவம் ஆரம்பமான போதும் , பிரசவம் மருத்துவமனையில் வைத்தே நிறைவடைந்துள்ளதாக அவர் இதன் போது தெரிவித்தார்.

இந்த குழந்தை 25 வாரத்திற்கும் குறைவான வயதுடைய குழந்தையொன்பதால் , இது போன்ற குழந்தைகளை காப்பாற்றுவதில் மிகக்குறைவான சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

China urged to end mass Xinjiang detentions by countries at UN

பிரேசில் ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரோ பதவியேற்பு

மஹா மன்னார் நீர்வழங்கல் திட்டத்திற்கான சாத்திய வள ஆய்வு