உள்நாடு

உலகக்கிண்ண தோல்வி குறித்து குசல் தெரிவித்த கருத்து!

(UTV | கொழும்பு) –

ஒரு அணியாக சிறந்த முறையில் விளையாடிய போதிலும், துரதிஷ்டவசமாக போட்டிகளில் தோல்வியடைந்ததாக இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். அதற்காக மிகவும் வருந்துகிறேன் என அவர் தெரிவித்தார்.

“போட்டியைப் பற்றி நான் மிகவும் வருந்துகிறேன். எம்மால் சிறப்பாக நிறைவு செய்ய முடியவில்லை. அதைத் தவிர, எனக்கு சொல்ல எதுவும் இல்லை. “எமது ஆரம்பம் சிறப்பாக இருந்தது, ​​ போட்டியில் தோல்வியடையும் போது, ​​ என்ன செய்ய முடியும் என்று பார்த்தோம், ஒரு அணியாக எங்களால் முடிந்ததைச் செய்ய எதிர்பார்த்தோம்.”

“அணியில் ஒற்றுமை இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். அனைவரும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எதிர்பார்த்தனர்.” “எனக்கு அணியில் இருந்து நிறைய ஆதரவு கிடைத்தது. போட்டிகளில் வெற்றி தோல்வியை கட்டுப்படுத்துவது கடினம். இனி வரும் தொடர்களை பார்த்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க வேண்டும்.” என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor

சங்கக்கார குழுவினால் வடமாகாண மக்களுக்கு நிதியுதவி

பாணின் விலை அதிகரிப்பு