வணிகம்

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சி

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மசகு எண்ணைக்கான கேள்வி குறைவடைந்தமையே இதற்கு காரணமாகும்.

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் நேற்று ஒரு பீப்பாய் மசகு எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் மசகு எண்ணையின் விலையை நிலையாக பேணுவதற்காக ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இன்று கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளன.

எவ்வாறாயினும் கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்தாலும் இலங்கையில் அதற்கமைய அதிகரிக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Related posts

ஹோட்டல் உணவு வகைகளின் விலைகளும் உயர்வு

வங்கி கடன் வட்டி சதவீதத்தினை குறைக்க நடவடிக்கை

அரிசி விலையை குறைக்க நடவடிக்கை