உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 6 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – சங்கரில்லா ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்புகளை பேணிய நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(14) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சங்கரில்லா ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் தற்கொலை குண்டுதாரியின் தந்தை இப்ராஹீம் உள்ளிட்ட 6 பேரையும் இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் கைது

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?

இன்று இதுவரை 468 பேர் தொற்றாளர்களாக அடையாளம் [UPDATE]