அரசியல்உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பிள்ளையானிடமிருந்து பல தகவல்கள் அம்பலம்!

தற்போது சிஐடி தடுப்பில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டு வருவதாக வீடமைப்புத் பிரதியமைச்சர.டி.பி. சரத் குமார தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் மூளையாக செயற்பட்டவர்கள் விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நாம் ஒரு கொலைகார சகாப்தத்தைக் கடந்து விட்டோம். இந்த சகாப்தத்தின் புள்ளி விவரங்களை இப்போது காண்கிறோம்.

ஷானி அபேசேகர பொறுப்புக்கு வந்தபோது, தவறு செய்தவர்கள்தான் மிகவும் பயந்து கூச்சலிட்டனர். சில நாட்களில் அறிக்கைகள் வெளிவரும் என்பது அவர்களுக்குத் தெரியும்,

அவை வரும்போது, நம்மில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத செயல்களைச் செய்த ஆட்சியாளர்கள் பற்றிய தகவல்களும் தரவுகளும் வெளிவரும்.

பிள்ளையான்கள் மட்டுமல்ல, பிள்ளையானின் அடியாட்களும் பிடிபடுகிறார்கள்.

சில நாட்களில் ஈஸ்டர் தாக்குதல்கள் கொலையாளிகள் நாட்டுக்கு கொண்டுவரப்படுவார்கள். ஏற்கனவே வெளிநாட்டில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிரதி அமைச்சர் டி.பி.சரத் குமார இவ்வாறு கூறினார்.

Related posts

எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பில் வௌியான விசேட வர்த்தமானி

editor

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும்

யோசித்த ராஜபக்ஷ, டேஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor