சூடான செய்திகள் 1

உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரச பாடசாலைகளின் உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் குறித்த திட்டம் மீண்டும் யோசனையாக முன்வைக்கப்பட்ட போது, இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வாராந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது.

குறித்த திட்டத்திற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

நாடு முழுவதும் இருட்டில் மூழ்கும் வாய்ப்பு – மின்சார சபை எச்சரிக்கை.

UPDATE-ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினார் கோட்டா…

நாலக சில்வாவின் உத்தியோகபூர்வ அறைக்குச் சீல்…