அரசியல்உள்நாடு

உமந்தாவ சென்ற முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த, ரணில்

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்று (25) உமந்தாவ பௌத்த உலகளாவிய கிராமத்தில் நடைபெற்ற புண்ணிய நிகழ்வுகள் தொடரில் பங்கேற்றுள்ளனர்.

வணக்கத்திற்குரிய சமந்தபத்ர தேரரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு உமந்தாவ பௌத்த உலக கிராமத்தில் இந்த புண்ணிய நிகழ்வுகள் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மகா சங்கரத்தினத்திற்கு சங்கத்திற்கான தானம் வழங்கப்பட்டதுடன், அந்த நிகழ்வில் தாம் பங்கேற்றதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பேஸ்புக் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ மேலும் தனது பதிவில் குறிப்பிட்டதாவது, ஆசியாவின் மிகப்பெரிய சுரங்க விகாரையின் மேல் அமைந்துள்ள, சில வாரங்களுக்கு முன்னர் புதிதாக திறக்கப்பட்ட நமது நாட்டின் மிகப்பெரிய படுத்திருக்கும் புத்த சிலையை மிகுந்த பக்தியுடன் வணங்கி பூஜித்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்பலரும் பங்கேற்றிருந்ததாக அந்த பேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

“விழுந்த குழியில் மீண்டும் விழாமல் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு மக்களின் பொறுப்பாகும்” இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன

CLEAN SRILANKA – தேவையற்ற அலங்கார பொருட்களை அகற்றும் சாரதிகள் – போக்குவரத்துக்கு இடையூறு – பதாதைகள் அகற்றம்

editor