விளையாட்டு

உபாதை காரணமாக இஷாந்த் ஷர்மா நீக்கம்

 (UTV|இந்தியா) – இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா நீக்கப்பட்டுள்ளார்.

இவரது கணுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவரினை பிரதிநித்துவப்படுத்தி அணியில் உமேஷ் யாதேவ் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நாளை(29) இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“Hall of Fame” விருதைப் பெற்றார் முரளிதரன்!!

93 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி

கல்முனை சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் வெள்ளி, வெண்கலம் வென்றார்.