முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துகளை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறப் போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வசிப்பதற்காக ஒரு வீட்டைக் கண்டுபிடித்ததாகவும், தற்போது புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க வீடுகளில் வசிக்கும் எவருக்கும் காலி செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் ஆனால் தனக்கு அத்தகைய அறிவிப்பு வழங்கப்படவில்லை என்றும் குமாரதுங்க கூறுகிறார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கியதால் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாகவும், இப்போது குணமடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது வீட்டின் மேல் மற்றும் கீழ் தளங்களுக்கு இடையில் செல்வதிலும் சிரமப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
