அரசியல்உள்நாடு

உத்தியோகபூர்வ இல்லத்தில் 2 மாதங்கள் தங்கியிருக்க அனுமதி கோரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இரண்டு மாதங்கள் தங்கியிருக்க அனுமதி கோரி ஒரு சட்ட நிறுவனம் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

சிலர் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை காலி செய்துள்ள போதிலும், அவர்களின் உடைமைகள் இன்னும் கொண்டு செல்லப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!

கோட்டாவின் வெளியேற்றம் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் ட்விட்டர் பதிவு

ரிஷாத் இன்றும் வாக்குமூலம்