அரசியல்உள்நாடு

உதுமாலெவ்வை எம்.பி விவகாரம் – நிசாம் காரியப்பர் எம்.பி விளக்கம்!

அட்டாளைச்சேனை அமைப்பாளர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை ஒரு தவறான புரிதலின் காரணமாகவே ஏற்பட்டுள்ளன.

கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளராகவும் செயற்படும் கௌரவ எம்.எஸ் உதுமாலெப்வை அதே நேரத்தில் அந்த கிராமத்தின் அமைப்பாளராகவும் உள்ளார்.

அந்தப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக, மக்களின் குறைகளை அறிந்து அவற்றை தீர்க்கும் நோக்கில் அவர் கிராமத்திற்குள் உள்ள வட்டாரங்களில் மக்களளின் குறைகளை தீர்க்க செயலில் ஈடுபட்டு பல கூட்டங்களை நடத்தியுள்ளார் என கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தக் கூட்டங்களுக்கான அறிவிப்புகளில் அவரது பதவி “பிரதேச அமைப்பாளர்” என குறிப்பிடப்பட்டிருந்ததால், அவர் தன்னிச்சையாக கட்சி உட்கட்டமைப்பு சம்பந்தமான கூட்டங்களை நடத்துகிறார் என்று கட்சியின் மத்திய குழுவில் செயற்படும் சில உறுப்பினர்களிடையே தவறான புரிதல் உருவானது.

இந்த தவறான புரிதல் உடனடியாக தீர்க்கப்பட வேண்டியது ஆகும். இதற்காக கட்சி தலைமை இரு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடும் என்றும், இந்த விடயத்துக்கு சுமூகமாக தீர்வு காணப்படும் என்றும் தான் நம்புவதாக தெரிவித்தார்.

Related posts

பிரதமர் ஹரிணி மன்னாருக்கு விஜயம்

editor

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அசாத் சாலியால் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்