முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, விஜேராமாயாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து விடைபெற வேண்டியிருந்தமை குறித்து தனது ‘எக்ஸ்’ கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது ‘எக்ஸ்’ கணக்கில் பதிவில், தனது தந்தை எல்லாவற்றையும் தொடங்கிய இடத்திற்குத் திரும்பி வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
‘உண்மையான பலம்’ பதவிகள் அல்லது சலுகைகள் ஊடாக அன்றி, மக்களின் அன்பில் இருந்தே உண்மையான பலம் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராமாயாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து புறப்பட்டு தங்காலையில் உள்ள அவரது கார்ல்டன் இல்லத்திற்கு இன்று (11) சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2 வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இதன் விளைவாகவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் மீண்டும் கையளிக்க வேண்டியிருந்தது.