உள்நாடுபிராந்தியம்

உண்மை காதல் – காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி உயிர்மாய்ப்பு – யாழில் சோகம்

தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயர்மாய்துள்ளார்.

யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

குளத்தில் தாமரை பூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று (18) அதிகாலை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிசாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுன கூட்டணியின் உத்தியோகபூர்வதாக அறிவிப்பு வெளியானது

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 17 இந்திய மீனவர்கள் கைது

editor

மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor