உள்நாடு

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மரண தண்டனைக் கைதிகள்

(UTV | கொழும்பு) – இரண்டு சிறைச்சாலைகளில் மரண தண்டனைக் கைதிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக தெரியவருகிறது.

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் இவ்வாறு கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தளர்த்துமாறு கோரி சுமார் 74 மரண தண்டனைக் கைதிகள் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதனால் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட தினத்திலிருந்து தமது தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரியுள்ளனர்.

இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்ட 235 கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது குறித்து ஏற்கனவே நீதி அமைச்சினால் ஜனாதிபதி செயலகத்திற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கனேமுல்ல சஞ்சீவ கொலை – இந்த பெண்ணை கண்டால் அறிவியுங்கள் – பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

editor

மற்றுமொரு 80 கிலோ எடை கொண்ட Sapphire Cluster

நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவிடமிருந்து டீசல் ஏற்றுமதி