உள்நாடு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்

கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் சாதாரணப் பணிகளுக்காக வைத்திய சேவைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சமீபத்தில் கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சட்டத்தரணி ஒருவருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசேட விசாரணைகளுக்கு அமைய இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நடைபெற்று வரும் முதற்கட்ட விசாரணைகள் தொடர்பாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக அவதூறு – சிஐடியில் முறைப்பாடு!

editor

“தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உங்கள் பணியைச் சரியாகச் செய்யுங்கள்”

‘ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டு’ – கட்சித் தலைவர்கள் தீர்மானம்