(UTV | கொழும்பு) – உக்ரைன் நாட்டில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த மேலும் மூன்று சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டிலிருந்து நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இதுவரை அறுவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி 185 சுற்றுலா பயணிகளும் 29 ஆம் திகதி 204 சுற்றுலா பயணிகளும் உக்ரைன் நாட்டிலிருந்து மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

