அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை – அஸாத்தின் குற்றச்சாட்டுக்கு கோட்டா பதில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதெனவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த சதி செய்ததாக கோட்டாபய ராஜபக்‌ஷ மீது, அஸாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ,

தயவுசெய்து, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை படியுங்கள். குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வழங்கியுள்ள சாட்சியங்கள் உட்பட, குறித்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முக்கிய சாட்சியான அஸாத் மௌலானா வெகு விரைவில் சுவிட்சர்லாந்திலிருந்து அழைத்து வரப்படவுள்ளார்.

கோட்டாபய ராஜபக் ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கோட்டாபய ராஜபக் ஷ மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே, பிள்ளையான் இணைந்து செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

மதஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு! தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!