உலகம்

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் – வலியுற்றுத்தும் நாடுகள்

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் பதற்றம் மேலும் தீவிரமடையாமல் இருப்பதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தகூடாது எனவும் இதனை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பாதுகாப்பை உறுதிப்படுத்த” இஸ்ரேலின் பக்கம் பிரான்ஸ் நிற்கும் எனவும் இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கலந்துரையாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூனும் இஸ்ரேலை பதிலடி கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் காசாவில் போர் நிறுத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முழு உரிமையும் இஸ்ரேலுக்கு முழு உரிமை இருந்தாலும் அவ்வாறு செய்தால் மத்தியகிழக்கில் மேலும் முரண்பாடு அதிகரிக்கும் என டேவிட் கேமரூன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இங்கிலாந்திலும் அவசர நிலை பிரகடனம்

Service Crew Job Vacancy- 100

உலகளவில் கொவிட் – 19 இனது ஆதிக்கம்