வகைப்படுத்தப்படாத

ஈரான் சண்டையிட விரும்பினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்

(UTV|IRAN) ஈரான் சண்டையிட விரும்பினால் , ஈரான் அத்தோடு முடிந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதியாக டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ஈரானுடானான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலும் பல்வேறு பொருளாதார  தடைகளை ட்ரம்ப் விதித்து வருகிறார்.

அதனால் ஈரான் – அமெரிக்கா இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது.

வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் இரு  நாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா? என்ற அச்சம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும் என்று டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

Dayasiri appears before PSC

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – 2018 ஹம்பாந்தோட்டை – தங்காலை நகர சபை

Saudi Arabia increases Sri Lanka’s Hajj quota