உலகம்

ஈரான் – இஸ்ரேல் போர் – மௌனம் கலைத்த துருக்கி

அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரானும் இஸ்ரேலும் மதிப்பளிக்க வேண்டும் என துருக்கி வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருதரப்பு போர் நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முன்வர வேண்டும் என துருக்கிய வெளியுறவு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

“இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட செய்தியை நாங்கள் வரவேற்கிறோம்.

அதற்கு இரு தரப்பினரும் முழுமையாக இணங்க வேண்டும்.

அத்துடன், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகள் திறந்திருக்க வேண்டும்” என்றும் துருக்கி வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

புக்கர் பரிசு பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார்

இடிபாடுகளுக்கு இடையே இதயத் துடிப்பை தேடும் மீட்புப் படையினர்

சவூதி, கத்தார், துபாய் இந்தோனேசியா, குவைத், பஹ்ரைன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இன்று புனித நோன்பு ஆரம்பம்

editor