உலகம்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி முடிவு

ஈரானுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வரும் நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

இந்த புதிய வரி விதிப்பானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போராட்டக்காரர்களைக் கொலை செய்தால், தான் இராணுவ ரீதியாக தலையிடப் போவதாக எச்சரித்ததைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த புதிய வரிகளை விதித்துள்ளார்.

தனது Truth Social சமூக வலைத்தளக் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

தாய்வானை புரட்டிப் போட்ட புயல் – 14 பேர் பலி – 124 பேர் மாயம்

editor

ஐந்து மாடிக்கட்டடம் பஸ் மீது விழுந்ததில் அதிகரிக்கும் உயிர் பலிகள்

மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் அஞ்சலோ மேர்க்கெல்