வகைப்படுத்தப்படாத

ஈராக் வன்முறை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல சீர்திருத்தத் திட்டங்கள் அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஈராக்கில் நடைபெற்று வந்த வன்முறை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், 17 சீர்திருத்தத் திட்டங்களை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பின்மை, ஊழல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக ஈராக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வந்த வன்முறைப் போராட்டத்தில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்தும் 5000 பேர் வரை காயமடைந்துள்ள நிலையில் குறித்த சட்டங்களை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு ஈராக் அரசாங்கத்தை ஐ.நா. வலியுறுத்தியது. இந்த நிலையில், பிரதமர் அதெல் அப்தெல் மஹிதி தலைமையிலான அமைச்சரவை அவசரமாகக் கூடி விவாதித்தது.

அந்தக் கூட்டத்தின் முடிவில், 17 சீர்திருத்த திட்டங்களை அமைச்சரவை அறிவித்தது. ஒரு இலட்சம் குடியிருப்புகள் கட்டித் தருவது, நிலப் பகிர்வு, நலிந்த குடும்பங்களுக்கு நல மானியங்களை அதிகரிப்பது ஆகியவை அந்த சீர்திருத்தத் திட்டங்களில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக மிகப் பெரிய சந்தை வளாகங்கள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களையும் அரசு அறிவித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Bambalapitiya Hit-and-Run: AG files indictments against driver

தமிழக கடற்றொழிலாளர்கள் 6 பேர் கைது

சவுதி அரேபிய இளவரசருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு