உலகம்

இஸ்லாமியருக்கான இடஒதுக்கீடு நீக்கப்படும் : அமித் ஷாவின் கருத்தால் சர்ச்சை

தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் வழங்கிய இஸ்லாமியருக்கான இடஒதுக்கீடு நீக்கப்படுமென மத்திய உட்துறைஅமைச்சரும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷாஅமித் ஷா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவின் மேடக் நாடாளுமன்ற தொகுதியில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமித் ஷா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ”தெலுங்கானாவில், டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஊழல்  அளவு கடந்துள்ளதாகவும், இரு கட்சிகளும் கைகோர்த்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மூன்றாவது முறையாகவும்  மோடியை தேர்ந்தெடுத்தால் தெலுங்கானாவை ஊழலில் இருந்து மோடி விடுவிப்பார் எனவும், தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் வழங்கிய இஸ்லாமியருக்கான இடஒதுக்கீடு முடிவுக்கு கொண்டு வரப்படும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

கொரோனாவுக்கு பலியான முதல் ஜனாதிபதி

சீன எல்லையை மூடியது மொங்கோலியா

சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்