உள்நாடு

இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி

(UTV | கொழும்பு) – இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்கள்

1. UTJ எனப்படும் ஐக்கிய தௌஹீத் ஜமா -அத்
2. CTJ எனப்படும் சிலோன் தௌஹீத் ஜமா -அத்
3. SLTJ எனப்படும் ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமா -அத்
4. ACTJ எனப்படும் அகில இலங்கை தௌஹீத் ஜமா -அத்
5. JSM எனப்படும் ஜமயத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா
6. தாருள் அதார் @ ஜமியுல் அதார் (Dharul Aadhar @ Jamiul Aadhar)
7. SLISM எனப்படும் இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம்
8.ISIS அமைப்பு
9. அல்கைதா (Al-Qaeda)
10. Save the Pearls அமைப்பு
11. Super Muslim அமைப்பு

Related posts

அலரி மாளிக்கைக்கு அருகிலுள்ள வீதி திறப்பு

editor

இராணுவத்தில் இருந்து விலகிய நபர்கள் மீண்டும் சேவையில்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் 21 சந்தேக நபர்கள் கைது

editor