உலகம்

இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் – கட்டார் பிரதமர் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலின் மீது பதில் தாக்குதல் நடத்த நட்பு நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்டார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, அந்நாட்டு பிரதமர் அப்துல்ரஹ்மான் அல்தானி கூறுகையில்,

இஸ்ரேலின் கொடுமைகள் தொடர்வதைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க அரபு – இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெறும்.

அதில் இஸ்ரேல் மீதான பதில் தாக்குதல் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த வளைகுடாவும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டார் தலைநகர் தோஹாவின் மீது ஹமாஸின் தலைவர்களைக் குறிவைத்து, கடந்த செப்.9 ஆம் திகதி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

அத்துமீறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேல் மீது கட்டாரும் அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் மூன்றாம் உலகப் போர் அபாயம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லெபனான் நீதி அமைச்சர் இராஜினாமா

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!

முதல்முறையாக முகக்கவசம் அணிந்த அமெரிக்க அதிபர்